Home இந்தியா கேரளா கடற்கரையோரங்களில் ஐஸ் தீவிரவாதத் தாக்குதல் எச்சரிக்கை

கேரளா கடற்கரையோரங்களில் ஐஸ் தீவிரவாதத் தாக்குதல் எச்சரிக்கை

811
0
SHARE
Ad

திருவனந்தபுரம் – இலங்கையிலிருந்து ஐஎஸ்ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய நாட்டுத் தீவிரவாதிகள் 15 பேரைக் கொண்ட குழு படகுகளில் புறப்பட்டு கேரளாவின் இலட்சத் தீவு பகுதிகளுக்கு சென்று கொண்டிருப்பதாக உளவுத் துறை தகவல்கள் வெளியாகியிருப்பதைத் தொடர்ந்து கேரள மாநிலத்தின் கடற்கரையோரப் பகுதிகள் முழு எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ரோந்துப் படையினர் அதிகரிக்கப்பட்டிருக்கும் வேளையில் கேரளா கடல்பகுதியைப் பயன்படுத்தும் மீன்பிடிப் படகுகளுக்கும், மற்ற கப்பல்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த உளவுத் துறை தகவலை இலங்கை அதிகாரிகள் கடந்த மே 23-ஆம் தேதி வெளியிட்டனர். 15 ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமியத் தீவிரவாதிகளை ஏற்றிக் கொண்டு படகுகள் இலட்சத் தீவுகள் நோக்கி பயணப்பட்டிருக்கின்றன என இந்தத் தகவல் உறுதிப்படுத்தியது.

#TamilSchoolmychoice

கணிசமான எண்ணிக்கையிலான கேரளா மாநிலத்தவர் இன்னும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதக் குழுக்களில் இயங்கிக் கொண்டிருப்பதாக உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.