சிலாங்கூரில் நீர் விநியோக சீர்குலைவுக்கான காரணங்கள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டுவிட்ட நிலையில் அவை சரி செய்யப்பட்டு விட்டன என அவர் கூறினார்.
கடந்த மே 5-ஆம் தேதி, மேற்குக் கரையோர நெடுஞ்சாலை கட்டுமான தளத்தில் நீர் குழாய் உடைந்ததைத் தொடர்ந்து சுமார் 400,000 பயனர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆறிலிருந்து ஏழு நாட்களுக்கு நீரில்லாமல் மக்கள் அவதியுற்றனர்.
“இந்த சிக்கலை நாங்கள் உடனடியாக தீர்க்க முடியவில்லை. ஏனென்றால், குழாய் பழுதுபார்க்கும் வேலைகள் செய்யும் போது ஓரிரு சம்பவங்களினால் நீண்ட நேரம் எடுக்கும் நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தை குறித்து நான் இன்னும் ஆயிர் சிலாங்கூரிடமிருந்து முழு அறிக்கைக்காக காத்திருக்கிறேன்” என அவர் குறிப்பிட்டார்.