Home இந்தியா இந்தியத் தேர்தல் வெற்றி, மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி!- ரஜினிகாந்த்

இந்தியத் தேர்தல் வெற்றி, மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி!- ரஜினிகாந்த்

772
0
SHARE
Ad

சென்னை: இந்தியாவின் 17-வது மக்களைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி, மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். மக்களை ஈர்க்கக்கூடிய தலைவராக மோடி இருக்கிறார். மேலும், இந்த தேர்தல் முடிவினை மையமாக வைத்து ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை விட்டுக் கொடுப்பது சரியல்ல எனவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு பேசினார்.

“தமிழகத்தில் மோடிக்கு எதிரான மனநிலை இருக்கிறது. அதனால் தான் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. ஒருமுறை ஆதரவு அலை அல்லது எதிர்ப்பு அலை வீசிவிட்டால் அதை மாற்றுவது கடினம். மோடியின் எதிர்ப்பலையால் தமிழகத்தில் மற்றவர்கள் வென்றுள்ளனர். நீட், மீத்தேன், கெயில் எரிவாயுத் திட்டம் குறித்து எதிர்க்கட்சிகளின் சூறாவளி பிரச்சாரம் தான் தமிழகத்தில் பாஜகவின் தோல்விக்கு காரணம்” என ரஜினிகாந்த் கூறினார்.

#TamilSchoolmychoice

“கோதாவரிகிருஷ்ணாகாவிரி நதிகளை இணைக்க நடவடிக்கைக் எடுக்கப்படும் என நிதின் கட்கரி கூறியது பாராட்டுக்குரியது. தமிழகத்தில் பாஜக தோல்வி அடைந்த பிறகும், நிதின் கட்கரி நதிகளை இணைப்பதை குறித்து பேசியது பாராட்டுக்குரியது. இது விரைவில் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.