Home நாடு அடிப்: டோமி தோமஸ்சின் உத்தரவு பேரில் ஷாஸ்லினின் நியமனம் இரத்து செய்யப்பட்டது!

அடிப்: டோமி தோமஸ்சின் உத்தரவு பேரில் ஷாஸ்லினின் நியமனம் இரத்து செய்யப்பட்டது!

755
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முகமட் அடிப்பின் மரண விசாரணையில் வழக்கறிஞர் ஷாஸ்லின் மன்சோரின் நியமனத்தை இரத்து செய்யும்படி அரசாங்க தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் தான் உத்தரவிட்டதாக, வீடமைப்பு மற்றும் நகராட்சிமன்ற அமைச்சரின் அரசியல் செயலாளர் நோர் இஸ்வான் அகமட் அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த  மே 23-ஆம் தேதி கடிதத்தின் மூலமாக இந்த விவகாரம் தெரிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சகம் உடனடியாக அரசாங்க தலைமை வழக்கறிஞரின் ஆலோசனைக்கு இணங்க அந்த வழக்கறிஞரை அவ்வழக்கிலிருந்து மீட்டுக் கொள்ள முடிவு செய்ததாக அவர் கூறினார். சம்பந்தப்பட்ட அந்த வழக்கறிஞர் அமைச்சர் சுராய்டாவின் பத்திரிக்கை செயலாளரின் மனைவியும் கூட எனக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், ஆரம்பக்கட்டத்தில் அடிப் இறந்ததற்கான முழு உண்மையை கண்டுபிடிப்பதற்காகவும், ஆதாரங்களை திரட்டுவதற்காகவும் இந்த வழக்கில் ஷாஸ்லின் நியமிக்கப்பட்டார் என அவர் கூறினார்.

இந்த திடீர் முடிவினால் மலாய்க்காரர்கள் மத்தில் பெரும் அதிருப்தி ஏற்பட்டு அரசாங்கத் தலைமை வழக்கறிஞரை பதவி விலகுமாறு கூறி வருகின்றனர்.