Home அரசியல் பல்கலைக்கழக மாணவர்கள் ஆரோக்கியமான பொதுத் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்- சைபுடின் அப்துல்லா

பல்கலைக்கழக மாணவர்கள் ஆரோக்கியமான பொதுத் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்- சைபுடின் அப்துல்லா

584
0
SHARE
Ad

timbalanகோலாலம்பூர், ஏப்ரல் 3- பல்கலைக்கழக மாணவர்கள் 13ஆவது பொதுத் தேர்தலில் பல்கலைகழகத்துக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாதவாறு தங்களை ஆரோக்கியமான தேர்தலில் ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

மாணவர்கள் இந்த இடைவெளியையும் வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி சிறந்த படைப்புகளையும் விமர்சன சிந்தனைகளையும் கொண்டு வர வேண்டும் என உயர்கல்வி துணையமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா (படம்)  கூறினார்.

“தற்போதிய நிலையில் வரும் பொதுத் தேர்தலில் மாணவர்கள் சுதந்திரமாக அரசியலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். அது தேர்தல் பிரச்சாரமாகவோ அல்லது, தேர்தல் வேட்பாளராகவோ இருக்கலாம். ஆனால் அரசியலானது ஆரோக்கியமான அரசியலாக இருக்க வேண்டும்” என்று அவர் சொன்னார்.

#TamilSchoolmychoice

டேவான் பாஹாசா டன் புஸ்தாகா (Dewan Bahasa dan Pustaka) ஏற்பாட்டில் புருணாய்- இந்தோனேசியா- மலேசியா மொழி குழு (Majlis Bahasa Brunei Darussalam-Indonesia- Malaysia) மற்றும் மொழி கருத்தரங்கம் மாநாட்டில் இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பல்கலைகழகம் மற்றும் பல்கலைகழக கல்லூரிகள் பகுதி 15 கீழ் அமைந்துள்ள சட்ட அமைப்பின் வழி  13ஆம் பொதுத் தேர்தலில் முதல் முறையாக மாணவர்கள் அரசியலில் தீவிரமாக ஈடுப்பட அரசாங்கம் வழி வகுத்துள்ளது.

மாணவர்களின் எண்ணங்களையும் அவர்களின் பேச்சுரிமைகளையும் அங்கீகரிக்க இது பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக் எடுத்துக் கொண்ட அரசியல் மாற்றங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

மேலும், கல்வியறிவுள்ள வாக்காளர்கள் மற்றும் நடுத்தர வாக்காளர்கள், ஆகியோர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு வாக்களிப்பார்கள் என்று தெமெர்லோ நாடாளுமன்றத்தைச் சார்ந்த சைபுடின்  தெரிவித்தார்.