“எம்ஜிஆரைப் போல ரஜினிகாந்தும் ஆன்மிகத்திலும், தேசியத்திலும் நம்பிக்கை கொண்டவர். அதிக மக்கள் செல்வாக்கு கொண்டவர். எனவே அவர் தனிக்கட்சி தொடங்கி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டால் இன்னொரு எம்ஜிஆராக உருவெடுப்பார்” எனும் இக்கருத்துக்கு மக்கள் மாறான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஏணி வைத்தாலும் எட்டாத அளவில் எம்ஜிஆர் இருக்கையில், அவருடன் ரஜினியை இணைத்து பேசுவது சரியானதாக இருக்காது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாஜகவுடன் ரஜினி கூட்டணி அமைக்க வேண்டும் என தாம் தொடர்ந்து சொல்லி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அண்மையக் காலமாகவே ரஜினி பாஜகாவின் கீழ் செயல்பட மட்டுமே இயங்குவார் எனும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அப்படி, ஒருவேளை இவர் பதவிக்கு வந்தால், தமிழர்களுக்கு பாஜகவினால் எப்படி நன்மை ஏதும் நடவாமல் போகிறதோ அவ்வாறே இவர் ஆட்சிக்கு வந்தப் பின்பும் நடக்கும் என மக்கள் கூறிவருகின்றனர்.
சட்டமன்ற தேர்தலின் போது கட்சி ஆரம்பிக்கவிருப்பதாக கூறிய ரஜினிகாந்த், கட்சி ஆரம்பிக்க இன்னும் இரண்டு வருடங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.