Home நாடு பயங்கரவாதம்: உள்ளூர் ஆடவர் உட்பட இரு வெளிநாட்டவர்கள் கைது, ஒருவர் தேடப்படுகிறார்!

பயங்கரவாதம்: உள்ளூர் ஆடவர் உட்பட இரு வெளிநாட்டவர்கள் கைது, ஒருவர் தேடப்படுகிறார்!

1113
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் மலேசிய நாட்டவர் மற்றும் இரு வெளிநாட்டவர்களை சந்தேகத்தின் பேரில் காவல் படையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு (ஆர்எம்பி) கைது செய்துள்ளது.

இது குறித்து கருத்துரைத்த காவல் துறைத் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர், கைதானவர்கள் 28 வயதிலிருந்து 42 வயதுக்கு உட்பட்டவர்கள் எனக் குறிப்பிட்டார். இது சம்பந்தமாக மேலும் ஒருவரை காவல் துறை தீவிரமாகத் தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வெளிநாட்டவர்களான இரு ஆடவர்களும் இந்தோனிசியா மற்றும் வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

20 வயதான அவ்விந்தோனிசிய ஆடவர் பயங்கரவாத தற்கொலை தாக்குதல்களை நடத்தலாம் என தெற்கு பிலிப்பைன்ஸ் செல்வதற்கு ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மூன்றாவது நபர் வங்காளா தேசத்தில் இயங்கும் இஸ்லாமிக் ஸ்டேட் பங்ளாடேஸ் எனும் தீவிரவாத குழுவை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

கைது செய்யப்பட அனைத்து ஆடவர்களும் குற்றவியல் சட்டம்  574 கீழ் கைது செய்யப்பட்டனர் என்றும், 2012-ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 747 கீழ் விசாரிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது, சபாவை இருப்பிடமாகக் கொண்ட 30 வயதுடைய, மார்வான் எனப்படும் இந்தோனிசிய ஆடவனை காவல் துறை தீவிரமாக தேடி வருவதாகவும், அவனைப் பற்றிய தகவல்கள் இருந்தால் இண்ஸ்பெக்டர் முகமட் ராசிசுவான் முகமட் ராசாலி (017-3278435) அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அப்துல் கேட்டுக் கொண்டார்.