Home நாடு ஐபிசிஎம்சி: காவல் அதிகாரிகளின் நலன் காக்கப்பட வேண்டும்!- ஐஜிபி

ஐபிசிஎம்சி: காவல் அதிகாரிகளின் நலன் காக்கப்பட வேண்டும்!- ஐஜிபி

864
0
SHARE
Ad

கோலாலம்பூர்காவல் துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையம் (ஐபிசிஎம்சிஇவ்வருட இறுதிக்குள் அமைக்கப்படும் என உள்துறை அமைச்சர் மொதியின் யாசின் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த ஆணையம் அமைக்கப்பட்டதும் சராசரி நடுத்தர வருவாயைக் கொண்டிருக்கும் காவல் அதிகாரிகளின் நலன் பாதுகாக்கப்படும் என காவல் துறை தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் கூறினார். காவல் அதிகாரிகளின் நலன் மற்றும் அவர்களின் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் டிடிடிஐயில் அமைந்துள்ள காவல் அதிகாரிகளின் தங்குமிடத்தை கண்காணிக்க சென்றிருந்த போது, அங்குள்ள வசதிகள் மன நிறைவு அளிக்கு வகையில் இல்லாததை அவர் குறிப்பிட்டார்.  இம்மாதிரியான சூழலில் வாழ்பவர்களின் உரிமைகளுக்காக போராடலாம் எனவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, காவல் துறையினரை தண்டிக்கும் எண்ணத்தில் இந்த ஆணையம் அமைக்கப்படும் எனும் தவறான கண்ணோட்டம் காவல் அதிகாரிகள் மத்தியில் இருந்து வந்த நிலையில் இந்த ஆணையத்தை அமைப்பதற்கு காவல் அதிகாரிகள் மத்தியிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன.

இந்த விவகாரம் குறித்து ஆட்சி முறைநேர்மை மற்றும் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு நல்லமுறையில் காவல் அதிகாரிகளுக்கு இதன் நோக்கத்தையும், செயல்பாட்டையும் எடுத்துரைத்ததற்குப் பின்பு காவல் துறை அதிகாரிகள் இந்த ஆணையத்தை அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.