Home Video கொரில்லா: குரங்குடன் கொள்ளையடிக்கும் கும்பல்!

கொரில்லா: குரங்குடன் கொள்ளையடிக்கும் கும்பல்!

1134
0
SHARE
Ad

சென்னை: நடிகர் ஜீவாவின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் கொரில்லா’. இப்படத்தின் முன்னோட்டக் காணொளிநேற்று வெள்ளிக்கிழமை வெளியானது.

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களில் மிக முக்கியமானவராக பார்க்கப்பட்டவர் நடிகர் ஜீவா. ராம், கற்றது தமிழ் உள்ளிட்ட வித்தியாசமான படங்களைத் தந்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். 

இருப்பினும், சமீப காலமாக வெளியான அவரது படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையாததால், படங்களின் எண்ணிக்கைக் குறைந்தது. இந்நிலையில், அவர் தற்போது நடித்துள்ளகொரில்லாபடத்தின் முன்னோட்டக் காணோளி வெளியாகி உள்ளது

#TamilSchoolmychoice

சாம் ஆண்டன் இயக்கியுள்ள இப்படத்தில், நடிகர் ஜீவாவுடன் சாலினி பாண்டே, யோகி பாபு, சதீஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளார். அத்துடன் படத்தில் சிம்பன்ஸி குரங்கு ஒன்றும் நடித்துள்ளது. இதனால் படம் குறித்து இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: