Home வணிகம்/தொழில் நுட்பம் நெகிரி செம்பிலான் அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்பப் புதிர்ப் போட்டி 2019

நெகிரி செம்பிலான் அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்பப் புதிர்ப் போட்டி 2019

1206
0
SHARE
Ad

சிரம்பான் – நெகிரி செம்பிலான் அளவிலான தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் போட்டி, தித்தியான் டிஜிட்டல் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை மே 18-ஆம் தேதி  தேசிய வகை பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைப்பெற்றது.

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியைக் குறிக்கும் வகையிலும், தமிழ்ப் பள்ளி மாணவர்களின் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய போர்ட்டிக்சன் சட்டமன்ற உறுப்பினரும், நெகிரி செம்பிலான் மாநில துணை சபாநாயகருமான இரவி முனுசாமி (படம்) “மாணவர்கள் தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் துறையில் அவர்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

தித்தியான் டிஜிட்டல் திட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 10 வருடங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகமய மாறுதலுக்கேற்ப தகவல் தொடர்புத் திறனறிவை (ICT) பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு சீரிய முறையில் செயல்வடிவம் கண்டு வருகின்றது.

புறநகர், நகர்புற மாணவர்களிடையே அமையப்பெற்ற தகவல் தொடர்புத் திறனறிவு (ICT) இடைவெளியை குறைக்க இத்திட்டம் பெரும் பங்காற்றி வருகின்றது. தித்தியான் டிஜிட்டல் திட்டம் அமைக்கப்பட்டதன் வழி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சுற்று வட்டார பொது மக்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்ப போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கம், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், மலேசிய உத்தமம் அமைப்பும் இணைந்து இப்போட்டியை வழிநடத்துகின்றன. இதில் 5 போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, அதில் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப புதிர்ப்போட்டி மட்டுமே மாநில அளவில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நெகிரி செம்பிலான் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, கடந்த மே 18-ஆம் தேதி சனிக்கிழமை தேசிய வகை பண்டார் ஸ்ரீ செண்டாயான்  தமிழ்ப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அருள்குமார் ஜம்புநாதன், மற்றும் வீரப்பன் சுப்பிரமணியம் (படம் – கீழே) கலந்து சிறப்பித்தனர். போர்ட்டிக்சன் சட்டமன்ற உறுப்பினரும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற துணை சபாநாயகருமான இரவி முனுசாமியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அவர்கள் தம் உரையில் வரும் காலங்களில், நெகிரி செம்பிலானில் அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களும் இப்போட்டியில் கலந்துக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர்.

மேலும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தின் அவசியத்தையும், அதன் விளைவுகளையும் மாணவர்கள் அறிய வேண்டும் என்றும், தொடர்ந்து தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எதிர்கால கணினித்துறையின் அவசியத்தையும் தெரிந்துக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டனர். அதன் தொடர் முயற்ச்சியாக, ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை தகவல் தொடர்புத் தொழில்நுட்ப கல்வியை முறையாக பெற்றிருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதன் முக்கிய அம்சமாக இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் தொழில்நுட்பக் கருவிகளை சிறந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் சிறந்த சமுதாயத்தை நாம் உருவாக்க முடியும் என்றனர். இப்போட்டியை ஏற்பாடு செய்த மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கத்திற்கு அவர்களின் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டனர்.

இவ்வாண்டு நெகிரி செம்பிலான்  மாநிலத்திலிருந்து இருந்து சுமார் 66 மாணவர்கள் 20 பள்ளிகளும் இப்போட்டியில் கலந்து கொண்டனர். தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டியில் மொத்தம் 5 போட்டிகள் உள்ளன.

அதில் புதிர்ப்போட்டி மாநில நிலையில் நடத்தப்பட்டு, தேசிய நிலைக்கு மாணவர்கள் தேர்வு பெறுவர். தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியில் இருபரிமாண அசைவூட்ட போட்டி, வரைதல் போட்டி, அகப்பக்கம் வடிவமைத்தல் போட்டி, ஸ்கேரேட்ஸ் போட்டிகள் போன்றவற்றில் மாநில நிலையில் மாணவர்கள் தேர்வு பெற்று, தேசிய நிலையிலான போட்டியில் மாணவர்கள் கலந்துக் கொண்டு சிறந்த படைப்பை வழங்குவர்.

தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி  மலாயா பல்கலைகழக வளாகத்தில் உள்ள ஐபிபிபி (IPPP) வளாகத்தில் நடைபெறும்.

ஏற்கனவே, ஜோகூர் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளிலிருந்து 12 வெற்றியாளர்கள் மாநில அளவிலான தகவல் தொழில்நுட்பப் போட்டியில் வெற்றி பெற்று தேசிய நிலையிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

நெகிரி செம்பிலான் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்கள்.

NEGERI SEMBILAN STATE LEVEL ICT QUIZ WINNERS 2019

1          CLARENCE MELBERT GABRIEL

(SJKT LDG SEREMBAN)

2          VISAKAN MURTE

(SJKT LDG SENAWANG)

3          DESHAN MUKUNTHAN

(SJKT LDG SENAWANG)

4          YASHINI KANNA

(SJKT BDR SPRING HILL)

5          THEERTHANAH MUTHURAMAN

(SJKT BAHAU)

6          DASVINDREN SUGUMARAN

(SJKT BDR SPRING HILL)

7          MATHUSAA MURUGAN

(SJKT RANTAU)

8          ELVIN JEFRY EDWIN DANNEL

(SJKT SENAWANG)

9          SDHIVIYANN SIVABAN

(SJKT AIR HITAM)

10        SHARMRAJ RATHINASAMAY

(SJKT LDG SEREMBAN)

11        RANISHAA KRISHNAN

(SJKT REPAH)

12        PIRAVIN RAJ MAHENDRAN

(SJKT LDG SEREMBAN)