கோலாலம்பூர்: கல்வி அமைச்சின் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 45,000 பள்ளிக் கட்டிடம் மற்றும் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியாளர்கள் வேலை இழக்கப்போவதாகக் கூறப்படுகிறது.
பூமிபுத்ரா குத்தகையாளர் அமைப்பின் (திடமான கழிவு மற்றும் துப்புரவு சேவை) செயலாளர் (கோஸ்ப்பெம்) அக்ராம் ஷா ஹானிஷா கூறுகையில், கல்வி அமைச்சின் புதிய ஒப்பந்தத்தினால் இவர்கள் அனைவரும் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இந்த நடைமுறை காரணமாக, 90,000 ஊழியர்களில் 45,000 ஊழியர்களுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வேலை இல்லாததை அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த விவகாரம் குறித்து கல்வி அமைச்சு நன்கு ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் என கோஸ்ப்பெம் அமைச்சைக் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஆயினும், கடந்த மார்ச் மாதம் பஹாங் மாநில கோஸ்ப்பெம் எழுப்பிய இதேபோன்ற குற்றச்சாட்டுகளை கல்வி அமைச்சு மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.