Home One Line P1 ஆரம்ப, பாலர் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர்

ஆரம்ப, பாலர் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர்

621
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக மூடப்பட்ட பின்னர், இன்று திங்கட்கிழமை (மார்ச் 1) நாடு முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளியின் ஒன்றாம், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பாலர் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர்.

இன்னும் சீருடை இல்லாத மாணவர்களுக்கு, கல்வி அமைச்சகம், பள்ளிக்கு சாதாரண ஆடைகளை அணிய அனுமதிப்பதாக அண்மையில் அறிவித்திருந்தது. மேலும், மார்ச் 26 வரை இந்த அனுமதி வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் 9- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்ட பின்னர், நேருக்கு நேர் பள்ளி அமர்வு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் கீழ் கற்றல் கற்பித்தலை தொடங்கி உள்ளனர்.

#TamilSchoolmychoice

தொடக்கப் பள்ளிகளைத் தவிர, தொழிற்கல்வி கல்லூரிகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான பள்ளி அமர்வு மார்ச் 8- ஆம் தேதி தொடங்கிறது. இடைநிலைப் பள்ளி ஏப்ரல் 4- ஆம் தேதி (ஜோகூர், கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு) மற்றும் ஏப்ரல் 5- ஆம் தேதி பிற மாநிலங்களுக்குத் தொடங்கும்.

அனைத்துலக பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மார்ச் 8- ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்.