அண்மையில், அவசரநிலை பிரகடனத்தின் போது, பிரதமரின் ஆலோசனையின் பேரில் மாமன்னர் பொருத்தமானதாகக் கருதும் ஒரு தேதியில் நாடாளுமன்றம் கூட முடியும் என்று மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் கூறியிருந்தார்.
“இந்த விசயம் அவசரகால கட்டளைச் சட்டத்தின் (தேவையான அதிகாரங்கள்) 2021- இன் 14 (1) (ஆ) துணைப் பத்தியில் இடம்பெற்றுள்ளது. இது பிரதமரின் ஆலோசனையின் பேரில் நாடாளுமன்றம் அழைக்கப்பட்டு, திட்டமிடப்பட்டு கலைக்கப்படும் என்று கூறுகிறது. இது போல, நாடாளுமன்றத்தை கூட்டுவதைத் தடுப்பதற்காக அவசரகால பிரகடனம் அமல்படுத்தப்பட்டது எனும் கருத்து தவறானது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.