Home One Line P1 ‘அவசரநிலை பிரதமர் பதவியை தக்க வைத்துக் கொள்ள பிறப்பிக்கப்படவில்லை’- மொகிதின்

‘அவசரநிலை பிரதமர் பதவியை தக்க வைத்துக் கொள்ள பிறப்பிக்கப்படவில்லை’- மொகிதின்

479
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியின் ஓராண்டு நிர்வாகத்தை கொண்டாடும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், அவசரகால அறிவிப்பு தனது பதவியைப் பாதுகாப்பதாக சில தரப்புகளின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.

“நான் அறிந்துள்ளேன். ஜனநாயகத்தின் அர்த்தத்தை நான் புரிந்துகொள்கிறேன். எனவே, இந்த கட்டளைகள் எதுவும் பிரதமர் என்றென்றும் ஆட்சியில் இருக்க முடியும் என்பதற்காக அல்ல,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் கூறினார்.

தற்போதைய அவசரநிலை ஆகஸ்டு 1- ஆம் தேதியுடன் காலாவதியாகும் என்று அவர் மீண்டும் கூறினார்.

#TamilSchoolmychoice

“நம் நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் முறை, அவசரநிலை முடியும் தேதி உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.