Home One Line P2 சரத்குமார், இஜக கூட்டணியில் இணைய கமல்ஹாசனுக்கு அழைப்பு

சரத்குமார், இஜக கூட்டணியில் இணைய கமல்ஹாசனுக்கு அழைப்பு

671
0
SHARE
Ad

சென்னை: மக்கள் நீதி கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆலந்தூர் தொகுதியில், போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7-ஆம் தேதி வெளியிடப்படும் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கூட்டணி விவகாரங்கள், புதிய கூட்டணிகள், தொகுதி பங்கீடு, நட்சத்திர வேட்பாளர்கள் என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

#TamilSchoolmychoice

அதிமுக, திமுக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடும் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, இந்திய ஜனநாயக கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. இது மாற்றத்திற்கான புதிய கூட்டணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பிற கட்சிகள் தங்கள் கூட்டணியில் இணைந்து போட்டியிட அழைப்பு விடுத்துள்ளது.