Home One Line P1 செல்வாக்கு அடிப்படையில் தடுப்பூசி பெற இருந்ததால், கிளந்தானில் பெயர் பட்டியல் சீரமைக்கப்படுகிறது

செல்வாக்கு அடிப்படையில் தடுப்பூசி பெற இருந்ததால், கிளந்தானில் பெயர் பட்டியல் சீரமைக்கப்படுகிறது

470
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோத்தா பாருவில் நாளை நடைபெறவிருந்த ஆரம்பக்கட்ட கொவிட் -19 தடுப்பூசி பெறுநர்களின் பட்டியலை கிளந்தான் மாநில சுகாதாரத் துறையும், மாநில அரசும் மீண்டும் தொகுத்து வருகின்றன.

இந்த விஷயத்தை விளக்கிய வட்டாரம், முன்னணி பணியாளர்களை ஒதுக்கி, செல்வாக்கு உள்ளவர்களுக்கு இது செலுத்தப்பட இருந்ததால், மறுசீரமைப்பு செய்யப்படலாம் என்று கூறினார்.

முன்னதாக (கடந்த வாரம்) சம்பந்தப்பட்ட சுகாதார ஊழியர்களின் அமலாக்க கட்டத்தில் 120 பெறுநர்களுக்கான ஒதுக்கீட்டை மாநில தலைமைச் செயலாளர் அலுவலகம் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

“பின்னர் வாட்ஸ்அப் குழுமத்தின் மூலம் ஓர் அறிவிப்பு வந்தது. மாநில அரசு பெறுநர்களின் பட்டியலுக்கு வழிவகுத்ததால், முன்னணி பணியாளர்களுக்கான தடுப்பூசி ஒத்திவைக்கப்பட்டது என்று. ஆனால், இந்த பிரச்சனை தொடங்கியதும், அலுவலகம் எண்ணத்தை மாற்றிக் கொண்டது என்று நான் நினைக்கிறேன்,” என்று வட்டாரம் கூறியதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.

முன்னதாக, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின், கொவிட் -19 தடுப்பூசியைப் பெறுவதில் செல்வாக்கைப் பயன்படுத்தி முயன்றதாகக் கூறப்படுவது குறித்து புகார் இருந்தால் தகவல் தர முன்வருமாறு கேட்டுக் கொண்டார்.