Home One Line P1 சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி பெற்ற 16 பேர் மரணம்

சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி பெற்ற 16 பேர் மரணம்

580
0
SHARE
Ad

சூரிக்: கொவிட்-19 தடுப்பூசி பெற்றுக் கொண்ட சுமார் 16 பேர் அடுத்தடுத்து சுவிட்சர்லாந்து நாட்டில் உயிரிழந்துள்ளனர் என்று சுவிஸ்மெடிக் எனும் அந்நாட்டின் மருத்துவ கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

இவர்களின் சராசரி வயது 86 என்றும், அதில் பெரும்பாலானோர் ஏற்கனவே பிற நோய்களால் அவதிப்பட்டு வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் பெற்றுக் கொண்ட தடுப்பூசிகளினால் 364 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன. அதில், 199 பேர் பிபைசர்-பயோன்டெக் தடுப்பூசி பெற்றவர்கள். 154 பேர் மாடர்னா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள்.

கொவிட்-19 தொற்றுக்கு, உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கிவிட்டன. பல்வேறு பகுதிகளில் இத்தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு ஒவ்வாமை உள்ளிட்ட பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், சிலர் தொடர் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.