Home One Line P1 கர்ப்பிணிப் பெண்கள் கொவிட் -19 தடுப்பூசி எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்

கர்ப்பிணிப் பெண்கள் கொவிட் -19 தடுப்பூசி எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்

508
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கர்ப்பிணிப் பெண்கள் கொவிட் -19 தடுப்பூசி எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்துள்ளார். ஆனால், இது அந்தந்த சுகாதார ஆலோசகர்களால் நிர்ணயிக்கப்படும் என்று அவர் கூறினார்.

தடுப்பூசி பெறுபவர்களுக்கும், பிறக்காத கருக்களுக்கும் ஏதேனும் ஆபத்துக்களை விளைவித்தால் கொவிட் -19 தடுப்பூசி வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படலாம்.

கர்ப்பமாக இருக்கும் முன்னணி ஊழியர்கள் தகுதியான பிரிவில் சேர்க்கப்படுவார்கள் என்றார்.

#TamilSchoolmychoice

இந்த நடவடிக்கை கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசிகளைப் பெறுவது குறித்த சமீபத்திய உலக சுகாதார அமைப்பின் ஆலோசனையின் படி உள்ளதாக அவர் கூறினார்.