Home One Line P1 மொகிதின் யாசினுக்கு இன்னும் பெரும்பான்மை இல்லை- சைபுடின் நசுத்தியோன்

மொகிதின் யாசினுக்கு இன்னும் பெரும்பான்மை இல்லை- சைபுடின் நசுத்தியோன்

551
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை தேசிய கூட்டணிக்கு அறிவித்திருந்தாலும், மொகிதின் யாசினுக்கு இன்னும் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்று பிகேஆர் கூறியது.

தேசிய கூட்டணி அரசாங்கத்தை நிலைத்து வைத்திருக்க மொகிதின் முயற்சிக்கக்கூடாது என்று பிகேஆர் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் கூறினார்.

“இன்று (பிப்ரவரி 28) இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய கூட்டணிக்கு சென்றாலும், பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்முடன் இல்லை என்பதை மொகிதின் யாசின் உணர வேண்டும். இந்த பலவீனமான அரசாங்கத்தை பராமரிக்க அவர் இனி முயற்சி செய்யக்கூடாது. மத்திய அரசியலமைப்பின் அடிப்படையில் பதவி விலகுங்கள், ” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நேற்று பிற்பகலில் மொகிதின் யாசின் ஆட்சிக்கு ஆதரவு வழங்குவதாகக் கூறி தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சோங் மற்றும் ஜுலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் லாரி சங் ஆகியோர் சத்தியப் பிரமாணப் பத்திரத்தை பிரதமரிடம் வழங்கினர்.

இவ்விருவர்களின் ஆதரவு இல்லாமல், நம்பிக்கை கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இப்போது 89- ஆக குறைந்துள்ளது.

கூடுதலாக, வாரிசான் மற்றும் உப்கோவைச் சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நான்கு பெஜுவாங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதினை ஆதரிக்காதவர்கள் ஆவர்.

இதற்கிடையில், பி.எஸ்.பி கட்சியின் இரண்டு பிரதிநிதிகள் மற்றும் இரண்டு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களான மஸ்லீ மாலிக் மற்றும் சைட் சாதிக் ஆகியோரும் தேசிய கூட்டணி அரசாங்கத்தை நிராகரிக்கின்றனர்.