Home One Line P2 2 பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதினுக்கு ஆதரவு

2 பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதினுக்கு ஆதரவு

589
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அடுத்த ஆட்சியை அமைக்கப் பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறேன் என ஒருபுறம் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தொடர்ந்து அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால், இன்று பிகேஆர் கட்சியின் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகி பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஆதரவாக இணைந்திருக்கின்றனர்.

சரவாக் மாநிலத்தின் ஜூலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் லேரி சிங், ஜோகூர் மாநிலத்தின் தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சூங் ஆகிய இருவரே கட்சி மாறியுள்ள பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து மேலும் பல பிகேஆர், அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு ஆதரவு வழங்க முன்வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லேரி சிங், ஸ்டீவன் சூங் இருவரும் தங்களின் ஆதரவுக் கடிதங்களை மொகிதின் யாசினுக்கு வழங்கும் புகைப்படங்கள் முகநூல் பக்கங்களில் பதிவிடப்பட்டிருக்கின்றன.