Home One Line P2 அதிமுக கூட்டணியில் பாமக-வுக்கு 23 தொகுதிகள் – எடப்பாடியின் வெற்றி வியூகம்

அதிமுக கூட்டணியில் பாமக-வுக்கு 23 தொகுதிகள் – எடப்பாடியின் வெற்றி வியூகம்

670
0
SHARE
Ad

சென்னை : அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் முதல் கட்சியாக, பாட்டாளி மக்கள் கட்சிக்கான தொகுதிகள் ஒதுக்கீட்டை துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதன்படி 23 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. வன்னியர் சமூகத்திற்கான 10.5 உள் ஒதுக்கீடு கோரிக்கை ஏற்கப்பட்ட நிலையில் இந்த தொகுதிகள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று சனிக்கிழமை பாமக கட்சியின் சார்பில் அன்புமணி இராமதாஸ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுக குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

#TamilSchoolmychoice

பாமகவின் கோரிக்கையான வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ஏற்கப்பட்டிருப்பதால், குறைவாக இருப்பினும், 23 தொகுதிகளை ஏற்பதாக அன்புமணி இராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

இந்த அரசியல் நகர்வு கட்டம் கட்டமாக காய்களை நகர்த்தி வரும் எடப்பாடியின் இன்னொரு வெற்றி வியூகமாகப் பார்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் பலம் வாய்ந்த கட்சிய பாமக. அதற்கே 23 தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து விஜய்காந்த் கட்சியான தேமுதிகவுடன் தொகுதி ஒதுக்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

மற்ற கட்சிகளுக்கு 23-ஐ விட குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனால், வன்னியர்களின் பெருவாரியான வாக்குகள் அதிமுக-பாமக கூட்டணிக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவின் வெற்றி வாய்ப்பையும் இந்த நகர்வு அதிகரிக்கச் செய்திருக்கிறது.