கடந்த காலங்களில் இவை அனைத்தும் இந்திய மக்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக நல மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்டதாகும் என மாநில பேராளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, தனித்தனியே இவை அனைத்தும் இயங்குவதை விடுத்து, மஇகா தலைமையகத்தின் கீழ் ஒன்றாக இயங்குவது சிறப்பானதாக இருக்கும் எனக் கூறப்பப்டுகிறது. இதன் மூலமாக தவறான செயல்கள் மற்றும் மோசடிகளை தவிர்க்கலாம் எனவும் அக்கூட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் மஇகாவின் புதிய தலைவராக பதவியேற்ற டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மஇகாவின் சொத்துகள் அனைத்தும் மீண்டும் மீட்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.