Home உலகம் தைவானை சீனாவிலிருந்து பிரிக்க அமெரிக்கா முயற்சி, சீனா எச்சரிக்கை!

தைவானை சீனாவிலிருந்து பிரிக்க அமெரிக்கா முயற்சி, சீனா எச்சரிக்கை!

810
0
SHARE
Ad

சிங்கப்பூர்: சீனப் பாதுகாப்புத்துறை அமைச்சரான வெய் பெங் (wei fenghe), சிங்கப்பூரில் நடைபெற்று வரும் ஆசியப் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ளார். இதில் பேசிய அவர், தைவானை சீனாவிடம் இருந்து பிரிக்கும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என்று அமெரிக்காவை சாடியுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி ஆகும் எகு மற்றும் அலுமனியம் ஆகியவற்றுக்கான வரியை அமெரிக்கா  உயர்த்தியதை தொடர்ந்து சீனா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் 128 பொருட்களுக்கு 25 விழுக்காடு வரை வரி விதித்துள்ளது.

அமெரிக்காவால் நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்புகளில் ஏற்படும் இழப்புகளை சரி செய்வதற்கான முயற்சி இது என சீனா தெரிவித்துள்ளதுஇதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் சரிவுகள் ஏற்பட்டன.

#TamilSchoolmychoice

அனைத்துலக சந்தையை சீனா சீர்குலைப்பதாக சீனா மீது வெள்ளை மாளிகை குற்றம் சாட்டி வருகிற இவ்வேளையில் தைவானை தங்களிடம் இருந்து பிரிக்க நினைத்தால், என்ன விலை கொடுத்தாவது சண்டையிடுவதைத் தவிர தங்கள் நாட்டு இராணுவத்துக்கு வேறு வழி இல்லை என்று அவர் எச்சரித்துள்ளார்

இறுதி வரை சண்டையிடத் தயார் என்றும் வெய் பெங் கூறியுள்ளார். சீனாவின் ஒரு அங்கமாக தைவானை ஏற்க மறுக்கும் அமெரிக்கா, அந்நாட்டுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதுவே சீனாவின் ஆத்திரத்துக்கு காரணமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.