Home இந்தியா இந்தி மொழியைத் திணிப்பது அரசின் நோக்கம் இல்லை!- நிர்மலா, ஜெய்சங்கர்

இந்தி மொழியைத் திணிப்பது அரசின் நோக்கம் இல்லை!- நிர்மலா, ஜெய்சங்கர்

957
0
SHARE
Ad

புது டில்லி: எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் இந்திய அரசுக்கு இல்லை என்றும், மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும் என்று தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்.

புதிய கல்விக் கொள்கையை வரையறுப்பதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக்குழுவை மத்திய அரசு நியமித்திருந்தது. இந்த குழுவானது, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது. அந்த, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த மும்மொழிக் கொள்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக்குகள் உலக அளவில் பகிரப்பட்டு வந்து மூன்றாம் இடத்தை பிடித்தது.

#TamilSchoolmychoice

இதே போல், இந்தி திணிப்புக்கு எதிராக கர்நாடக முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், திமுக தலைவர் மு..ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பதவில், மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே ஒரே பாரதம் உன்னத பாரதம் #EkBharatSreshthaBharat முயற்சியை துவக்கினார் என்று குறிப்பிட்டுள்ளார். தொன்மையான தமிழை போற்றி வளர்ப்பதற்கு மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.

இதேபோல், எந்த மொழியையும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் தெரிவித்துள்ளார்.