Home இந்தியா தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா விட்டுக்கொடுக்காது!

தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா விட்டுக்கொடுக்காது!

569
0
SHARE
Ad

புது டில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு  தீவிரவாதத்திற்கு எதிராக எவ்விதத்திலும் சகிப்புத் தன்மையைக் கொண்டிருக்காது எனத் தெரிகிறது.

சமீபத்தில் நடைபெற்ற இந்தியத் தேசிய தேர்தலில் பாஜக மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியது. கடந்த திங்களன்று புதிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்புப் படைகளுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கினார்.

எந்தவொரு விமர்சனத்திற்கும் அஞ்சாமல் முழு சகிப்புத்தன்மையில்லா கொள்கையை தொடர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்த ஆண்டு முதல் ஐந்து மாதங்களில் 101 பயங்கரவாதிகள் ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்புப் படைகளால் அகற்றப்பட்டனர். சராசரியாக ஒவ்வொரு மாதமும் 20 பயங்கரவாதிகள் அகற்றப்படுகிறார்கள் எனக் கூறப்படுகிறது.