Home நாடு நாட்டை பிரபலமடையச் செய்வதில் அமைச்சர்களுக்கும் பங்கு உண்டு!

நாட்டை பிரபலமடையச் செய்வதில் அமைச்சர்களுக்கும் பங்கு உண்டு!

605
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விளம்பரப்படுத்துவதற்கு எந்நேரமும் பிரதமரையே எதிர்பார்த்துக் கொண்டிருப்பது சரியானதாக இருக்காது என அப்துல் காடிர் ஜாசின் கூறியுள்ளார்.

பக்காத்தான் ஹாராப்பான் அமைச்சர்களும் தங்களின் சக்திக்கு ஏற்றவாறு இந்நாட்டை வளப்படுத்துவதில் இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

பக்காத்தான் ஹாராப்பான் அரசு தற்போது சரியான பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கும் வேளையில், அமைச்சர்கள் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என காடிர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

பொருளாதாரம், நிதி மற்றும் வர்த்தகம் போன்ற விவகாரங்களில் அமைச்சர்கள் பொறுப்பாகவும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பெயர் போனவர்களாகவும் திகழ வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.