புதுடில்லி – இணையத் துறையில் அடுத்த கட்ட தொழில்நுட்பப் புரட்சியாகப் பார்க்கப்படும் 5ஜி கட்டற்ற இணயத் தொடர்பு அடுத்த 100 நாட்களில் இந்தியாவில் சோதனை முன்னோட்டமாக அறிமுகம் காணும் என தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.
ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பமான 5 ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்தைத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏலமுறையில் 5ஜி அலைக்கற்றை விற்பனை செய்யப்படுவதன் மூலம் அரசாங்கத்திற்கு கணிசமான வருமானம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை இந்தியாவில் செயல்படுத்த சீனாவின் வாவே (Huawei) நிறுவனம் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறது. பாதுகாப்பு அம்சங்களில் தாங்கள் நேர்மையுடன் நடந்து கொள்வோம் என்றும் அந்த நிறுவனம் உறுதி வழங்கியுள்ளது.
5ஜி அலைக்கற்றை விற்பனை மூலம் இந்திய அரசாங்கத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாய்கள் வருமானம் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.