Home உலகம் 7,000 குடும்பங்கள் இலங்கையை விட்டு வெளியேற விண்ணப்பம்!

7,000 குடும்பங்கள் இலங்கையை விட்டு வெளியேற விண்ணப்பம்!

842
0
SHARE
Ad

கொழும்பு: இலங்கையை விட்டும் வெளியேறுவதற்கு அந்நாட்டைச் சேர்ந்த சுமார் 7,000 குடும்பங்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகத்தில் விண்ணப்பித்துள்ளதாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுனர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடுத்து, வசதி படைத்த குடும்பங்களே, இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் மற்றும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து, நேற்று வெள்ளிக்கிழமை தனது சொந்த ஊரான காத்தான்குடியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில், ஜும்மா தொழுகைக்கு பின்னர் அவர் உரையாற்றுகையில் இந்தத் தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

நாட்டில் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து, கிழக்கு மாகாண ஆளுனராகப் பதவி வகித்த ஹிஸ்புல்லா உள்ளிட்ட இரண்டு முஸ்லிம் ஆளுனர்கள் மற்றும் ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகினர்.