Home உலகம் மேசுட் ஒஸிலின் மாப்பிள்ளை தோழனாக துருக்கி அதிபர்!

மேசுட் ஒஸிலின் மாப்பிள்ளை தோழனாக துருக்கி அதிபர்!

841
0
SHARE
Ad

இஸ்தான்புல்: நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜெர்மனி கால்பந்து வீரர் மேசுட் ஒஸிலின் திருமணத்தில், துருக்கியின் அதிபர் ரிசப் தய்யீப் எர்துவான் மாப்பிள்ளை தோழனாக நின்று அவரது திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

துருக்கி வம்சாவளியைச் சேர்ந்த ஒஸில், கடந்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவதற்கு முன்னால் அதிபர் எர்துவானோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் சர்ச்சைக்குள்ளானது.

இந்த புகைப்படங்களால் ஜெர்மனியில் தான் அனுபவித்த இனவெறி மற்றும் மரியாதை குறைவை சுட்டிக்காட்டி அனைத்துலக கால்பந்து போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்று மேசுட் ஒஸில் அறிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

30 வயதான அர்செனல் கால்பந்து கிளப் வீரரான மேசுட் ஒஸில், அவரது காதலியும், முன்னாள் மிஸ். துருக்கி அமினி குல்செயை, பாஸ்பரஸ் ஆடம்பர தங்கும் விடுதியில் நேற்று திருமணம் செய்துகொண்டார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் அதிபர் எர்துவானை தனது மாப்பிள்ளை தோழனாக இருந்து திருமணத்தை நடத்தி வைக்க கேட்கப்போவதாக ஒஸில் அறிவித்தது, துருக்கியில் பெரும் விமர்சனங்களை எழுப்பியது.