Home உலகம் கிரிக்கெட் : 7 விக்கெட்டுகளில் ஆப்கானிஸ்தானை வெற்றி கொண்டது நியூசிலாந்து

கிரிக்கெட் : 7 விக்கெட்டுகளில் ஆப்கானிஸ்தானை வெற்றி கொண்டது நியூசிலாந்து

1217
0
SHARE
Ad

டாண்டன் (இங்கிலாந்து) – உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று சனிக்கிழமை இங்கு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானும் நியூசிலாந்தும் மோதின.

தனது முதல் பாதி ஆட்டத்தில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 41.1 ஓவரிலேயே 10 விக்கெட்டுகளையும்  இழந்து 172 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

அடுத்து இரண்டாவது பாதியில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 32.1 ஓவரிலேயே 173 ஓட்டங்களை எடுத்து, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து 7 விக்கெட்டுகளில் நியூசிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் வரிசையில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதும் பரபரப்பான ஆட்டம் நடைபெறுகிறது.