Home நாடு ஜிஎம்சி: அமைச்சர்களின் செயல்திறனை கண்காணிக்கும் குழுவை மசீச அமைத்தது!

ஜிஎம்சி: அமைச்சர்களின் செயல்திறனை கண்காணிக்கும் குழுவை மசீச அமைத்தது!

648
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கத்தின் மீதான கண்காணிப்பை துரிதப்படுத்த, அரசாங்க கண்காணிப்புக் குழு (ஜிஎம்சி) ஒன்றை மசீச தொடங்கியுள்ளது.

தொழில்சார் தகைமைகள் கொண்ட 300 கட்சி உறுப்பினர்கள் இப்பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என கட்சித் தலைவர் வீ கா சியோங் கூறினார். அவர்களில் பெரும்பாலானோர் 40 வயதுக்கும் குறைவானவர்கள் என அவர் தெரிவித்தார்.

அனைத்து அரசாங்க அமைச்சர்களின் செயல்திறன்களைக் கண்காணிக்கும் வகையில் ஜிஎம்சி, ஒன்பது வெவ்வேறு பிரிவுகளில் செயலாற்றும் என அவர் கூறினார். சட்டம், பொருளாதாரம், சுற்றுச் சூழல் மற்றும் பிற துறை வல்லுநர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த மார்ச் மாதம் மசீசவின் 70-வது ஆண்டு நிறைவு விழாவின் போது ஜிஎம்சி அமைப்பதற்கான திட்டத்தை லிம் அறிவித்திருந்தார்.