Home உலகம் “இலங்கையின் உத்வேகத்தை எந்த தீவிரவாதமும் தகர்க்க இயலாது!”- மோடி

“இலங்கையின் உத்வேகத்தை எந்த தீவிரவாதமும் தகர்க்க இயலாது!”- மோடி

712
0
SHARE
Ad

கொழும்பு: கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி இலங்கையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு இலக்கான தேவாலயத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஞாயுற்றுக்கிழமை வருகைப் புரிந்துள்ளார்.

அவர் அங்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடி பதவியேற்ற முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு மற்றும் இலங்கை அமைகிறதுஇலங்கை தலைநகர் கொழும்பு நகருக்கு விமானம் மூலம் வந்த அவரை இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்கே வரவேற்றார்.

அதன் பின்பு அங்கிருந்து அதிபர் மாளிகைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள புனித அந்தோனி தேவாலயத்துக்கு பிரதமர் மோடி சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடி நிருபர்களிடம் கூறுகையில் இலங்கை மீண்டு எழும் என்ற நம்பிக்கை தமக்கு இருக்கிறது என்றும் கோழைத்தனமான செயல்கள் இலங்கையின் உத்வேகத்தை தோற்கடிக்காது எனவும் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“இலங்கையுடன் எப்போதும் தோளோடு தோளாக இந்தியா இருக்கும். தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவிக்கிறேன்”  என மோடி தெரிவித்துள்ளார்.