Home நாடு பாஸ்: தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியில்லை!

பாஸ்: தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியில்லை!

729
0
SHARE
Ad

குவாந்தான்: பாஸ் கட்சியின் 65-வது கட்சித் தேர்தலை முன்னிட்டு கட்சியில் ஒரு சில பதவிகளுக்கு போட்டிகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயினும், பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் ஆகியோர் இம்முறையும் அவர்களது பதவிகளை தக்கவைத்துக் கொண்டுள்ளதாக பாஸ் கட்சியின் தேர்தலுக்கான மத்திய செயற்குழுத் தலைவர் முகமட் புவாட் முகமட் சாலே கூறினார்.

கடந்த 2002-ஆம் ஆண்டிலிருந்து பாஸ் கட்சியின் தலைவராக ஹாடி அவாங் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் துவான் இப்ராகிம் 2015-ஆம் ஆண்டு முதல் கட்சியின் துணைத் தலைவர் பதவியினை வகித்து வருகிறார்.

#TamilSchoolmychoice

இவ்வேளையில், முன்னாள் உதவித் தலைவர்களான இட்ரிஸ் அகமட், முகமட் அமர் நிக் அப்துல்லா மற்றும் இஸ்காண்டார் அப்துல் சாமாட் உடன் இணைந்து திரெங்கானு மந்திரி பெசார் அகமட் சம்சுரி மொக்தாரும் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.

பாஸ் மத்திய செயற்குழுக் குழுவில் 18 இடங்களுக்கு 29 வேட்பாளர்கள் போட்டியிட விரும்புவதாகவும், பாஸ் இளைஞர் செயற்குழுவில் உள்ள 12 இடங்களுக்கு 16 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கட்சியின் 65-வது தேர்தல் வருகிற ஜூன் மாதம் 15-ஆம் தேதி புக்கிட் கம்பாங் கொன்வென்ஷன் செண்டரில் நடைபெற உள்ள வேளையில், இளைஞர் பகுதிக்கான தேர்தல் ஜுன் 19 மற்றும் 20-ஆம் தேதி அதே இடத்தில் நடைபெறும் என்று அவர் கூறினார்.

பாஸ் கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டம் வருகிற ஜூன் 21-ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்றும் முகமட் புவாட் கூறினார்.