புத்ராஜெயா: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தாம் இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் மகாதீர் முகமட்டை சந்தித்ததாக தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 30 நிமிடங்களுக்கு நீடித்த அந்த சந்திப்பின் போது ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவரான லத்தீஃபா கோயாவின் நியமனம் குறித்தும் அனைத்துலக விவகாரங்களும் பேசப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
லத்தீஃபா கோயாவின் நியமனம் குறித்து தமது கருத்துகளை முன்வைத்ததாகவும், இனி வரும் காலங்களில் தேசிய முன்னணி அல்லது நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் யாராக இருப்பினும், ஊழல் சம்பந்தமான விவகாரங்கள் லத்தீஃபா கோயா தலைமையின் கீழ் சிறப்பாக கையாளப்படும் என தாங்கள் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வெள்ளியன்று, ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக லத்தீஃபா கோயாவை நியமித்ததற்கு அன்வார் ஒரு சில கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த நியமனம் குறித்து பொது மக்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்க்கப்பட்டது.