Home நாடு ஷாஸ்லின் மன்சோர் மீண்டும் அடிப்பின் வழக்கில் இணைந்தார்!

ஷாஸ்லின் மன்சோர் மீண்டும் அடிப்பின் வழக்கில் இணைந்தார்!

647
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீ பீல்ட் கோயில் கலவரத்தின் போது மரணமுற்ற தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மரண விசாரணையில் இருந்து விலகிக் கொண்ட வழக்கறிஞர் ஷாஸ்லின் மன்சோர், மீண்டும் அடிப்பின் குடும்பத்தாரை பிரதிநிதிக்க இருப்பதாக இன்று புதன்கிழமை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அடிப்பின் தந்தையாரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் இந்த முடிவினை எடுத்ததாக கூறினார். மேலும், தாம் அடிப் குடும்பத்தாருடன் நெருங்கிய பழக்கத்தில் உள்ளதாகவும் ஷாஸ்லின் குறிப்பிட்டார்.

அண்மையில், ஷாஸ்லின் தாம் அடிப்பின் வழக்கை எடுத்து நடத்துவதிலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்திருந்தார்.