கடந்த சில நாட்களாகவே மோசமான வானிலையால் அடுத்தடுத்து சில ஆட்டங்கள் இரத்து செய்யப்பட்டிருப்பதால், கிரிக்கெட் போட்டிகள் சுவாரசியத்தையும், பரபரப்பையும் இழந்திருக்கின்றன.
இன்று வியாழக்கிழமை பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – நியூசிலாந்து இடையிலான போட்டியில் குழுக்களுமே இதுவரை தோல்வியடையாமல் விளையாடிக் கொண்டிருப்பதால், இந்த ஆட்டத்தில் வெல்லப் போவது யார் என்ற கேள்வி கிரிக்கெட் இரசிகர்களிடையே பரபரப்பாக உலவி வந்தது.
ஆனால் ஆட்டம் இரத்து செய்யப்பட்டு இரண்டு குழுக்களுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டிருக்கிறது.
உலகக் கிண்ணத்திற்கான 10 நாடுகள் புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் முதல் இரண்டு இடத்தைப் பிடித்திருக்கின்றன. இங்கிலாந்தும் இந்தியாவும் அடுத்த இரண்டு இடங்களைப் பிடித்திருக்கின்றன.