Home Video தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சூடு பிடித்துள்ளது, விஷால் வெளியிட்ட பிரச்சாரக் காணோளி!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சூடு பிடித்துள்ளது, விஷால் வெளியிட்ட பிரச்சாரக் காணோளி!

1175
0
SHARE
Ad

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்வருகிற ஜூன் 23-ஆம் தேதி சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு விஷால் மற்றும் கே.பாக்கியராஜ் அணிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனஇந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையேற்று நடத்த உள்ளார்

கடந்த முறை முதன்முதலாக தேர்தல் களத்தில் கால் பதித்த பாண்டவர் அணியின் அதிரடி பணிகளால் பரபரப்பான சூழலில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றதுவிஷால் அணியும்சரத்குமார் அணியும் மோதிய போட்டியில் தமிழ் திரைப்பட நடிகர்கள் இரண்டு அணிகளாக பிரிந்தனர்.

கடந்த முறை வெற்றிப் பெற்ற விஷால் அணி, தாங்கள் அளித்த வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றவில்லை எனவும்விஷால் சரியாக செயல்படவில்லை எனவும் குற்றங்கள் எழுந்துள்ள வேளையில், விஷால் தங்களின் கடந்த கால அடைவுகள் மற்றும் சவால்கள் நிறைந்த காலக்கட்டத்தை காணொளியாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த 60 ஆண்டுகளில் தென்னிந்திய நடிகர் சங்கம் செய்யத்தவறியதை பாண்டவர் அணி செய்து முடிக்கும் எனவும், ஒரு சிலரின் சுயநலத்தால் நடிகர் சங்க நிலம் தனியார் நிறுவனத்திற்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டதையும் குறிப்பிட்டு அந்த காணொளியில் பதிவிட்டுள்ளார்கள்.

மேலும், பாண்டவர் அணியின் மிக பெரிய அடைவாகக் கருதப்படுவது தென்னிந்திய நடிகர் சங்கதிற்காக எழுப்பப்படும் கட்டிடமே.  கடந்த தலைமைத்துவத்தின் போது துணை நடிகர்கள், நாடக நடிகர்கள் என அனைவரும் சிரமத்தை எதிர் நோக்கியதையும் அக்காணொளியில் பதிவிட்டுள்ளனர்.

இதனிடையே, பாண்டர் அணியின் தலைமைத்துவத்தில் அதிருப்தி அடைந்ததால், பாக்கியராஜ் தலைவராக போட்டியிட ஐசரி கணேஷ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் அவர்களை எதித்து போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது.

இம்முறையும் நடிகர் சங்கத் தேர்தல் கூடுதல் தீவிரத்துடன் நடைபெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் பாண்டவர் அணியின் சார்பில் வெளியிடப்பட்ட பிரச்சாரக் காணோளியைக் காணலாம்: