Home நாடு லோக்மான், கோபாலகிருஷ்ணன் காவல் துறையின் பிணையில் விடுவிப்பு!

லோக்மான், கோபாலகிருஷ்ணன் காவல் துறையின் பிணையில் விடுவிப்பு!

787
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோவின் உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் காவல் துறையின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவருடன் கைதான பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவருமான என்.கோபாலகிருஷ்ணனும் விடுவிக்கப்பட்டார் என சிலாங்கூர்  மாநில மூத்த குற்றவியல் புலனாய்வு துறை உதவி ஆணையாளர் பாசில் அகமட் கூறினார். தீவிர விசாரணைக்குப் பிறகே இருவரும் விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

நேற்று வியாழக்கிழமை மாலை 6.45 மணியளவில் இருவரும் காஜாங்கில் அமைந்துள்ள லோக்மானின் இருப்பிடத்தில் கைது செய்யப்பட்டனர்.  தனது கைப்பேசியை கொடுக்க மறுத்தக் காரணத்தினால் லோக்மான் சட்டப் பிரிவு 504 கீழ் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பிகேஆர் சந்துபோங் இளைஞர் பகுதித் தலைவரும் துணையமைச்சர் ஒருவரின் முன்னாள் செயலாளருமான முகமட் ஹசிக் அப்துல் அசிஸ், ஓரினச் சேர்க்கை காணொளியில் இருந்தது நான்தான் எனவும் தன்னுடன் இருந்தது பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி என்றும் கூறியிருந்தது தொடர்பில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் விவகாரத்தில் காவல் துறையில் வாக்குமூலத்தை லோக்மான் நேற்று வழங்கினார்.

லோக்மான் நூர் அடாம் வாக்குமூலம் வழங்கிய சில மணி நேரங்களுக்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார் என அவரது சிறப்பு அதிகாரி பைசுல் அலி அனுய்  உறுதிப்படுத்தியதாக பிரி மலேசியா டுடே இணையத் தளத்தின் செய்தி தெரிவித்திருந்தது.