Home நாடு ஓரினச் சேர்க்கை காணொளி : ஹசிக் அசிஸ் விமான நிலையத்தில் கைது

ஓரினச் சேர்க்கை காணொளி : ஹசிக் அசிஸ் விமான நிலையத்தில் கைது

764
0
SHARE
Ad
முகமட் ஹசிக் அசிஸ்

கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய அஸ்மின் அலி காணொளியில் இருந்த இருவரில் ஒருவர் நான்தான் என பகிரங்கமாக ஒப்புக் கொண்ட சரவாக் சந்துபோங் தொகுதி பிகேஆர் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் ஹசிக் அசிஸ், கேஎல்ஐஏ 2 அனைத்துலக விமான நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

விமானத்தில் புறப்படுவதற்கு அவர் சென்று கொண்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய அவரது வழக்கறிஞர் ரமேஷ் சிவகுமார் தான் விமான நிலையக் காவல் நிலையத்திற்கு விரைந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்ததாக பிரி மலேசியா டுடே இணையத் தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.