Home நாடு “அஸ்மின் காணொளியின் சூத்திரதாரி யாரென்று பிரதமருக்கு தெரியும்!”- ராயிஸ்

“அஸ்மின் காணொளியின் சூத்திரதாரி யாரென்று பிரதமருக்கு தெரியும்!”- ராயிஸ்

873
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சரான முகமட் அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளிக்கு சம்பந்தப்பட்ட சூத்திரதாரியை குறித்து அரசாங்கம் எம்மாதிரியான நடவடிக்கையை எடுக்க உள்ளது என ஆராய வேண்டும் என நெகிரி செம்பிலான் பெர்சாத்து கட்சியின் தலைவர் ராயிஸ் யாட்டிம் கூறினார்.

சாந்துப்போங் தொகுதி பிகேஆர் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் ஹசிக் அப்துல்லாவை விசாரித்ததன் முடிவினை கண்டிப்பாக காவல் துறையினர் அரசாங்கத்திடம் கூறியிருப்பர்.

தனது முகநூல் பக்கத்தில் இது குறித்து குறிப்பிட்டிருந்த ராயிஸ் காவல் துறையினர் கண்டிப்பாக பிரதமரிடம் இதற்கு காரணமானவர்களை பற்றி தெரிவித்திருப்பார் என்றும், சம்பந்தப்பட்டவருக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட்டு, ஒன்றாக இணைந்து மலேசிய அரசியலை தூய்மையான பாதைக்குக் கொண்டு செல்வோம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.