Home நாடு அபராதத்திற்கு பதிலாக பணத்தைக் கோரும் அமலாக்க அதிகாரியின் காணொளி வெளியீடு!

அபராதத்திற்கு பதிலாக பணத்தைக் கோரும் அமலாக்க அதிகாரியின் காணொளி வெளியீடு!

784
0
SHARE
Ad

ஷா அலாம்: கிளானா ஜெயாவில் அமைந்துள்ள ஒரு விற்பனை மையத்தில் பணம் பெறும் ஒரு அமலாக்க அதிகாரியின் காணொளி பரவலாக சமூக ஊடகங்களளில் பகிரப்பட்டு வருகிறது.

15 வினாடி காணொளியில் அக்கடைக்காரர் வெள்ளைக் காகிதத்தில் பணத்தை மறைத்துக் கொடுப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல வணிக உரிமையாளர்கள் இது குறித்து என்னிடம் புகார் அளித்துள்ளனர், ஆனால் இப்போது வரை அதனை நிரூபிக்க யாரிடமும் எந்த ஆதாரமும் இல்லைஎன்று முன்னாள் பெட்டாலிங் ஜெயா நகராட்சிமன்ற (எம்பிபிஜே) உறுப்பினர் சீன் ஓன் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) அலுவலகத்தில் சந்தித்த போது கூறியதாக ஸ்டார் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

காணொளி பரவலாகப் பகிரப்பட்டு வந்த நிலையில், காணோளியில் முகம் தெளிவாகக் காணப்படுகிற அந்த அமலாக்க அதிகாரி, மீண்டும் கடைக்குச் சென்றுஉணவக உரிமையாளரிடம் பேசும்படி கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமலாக்க அதிகாரிகள் அபராதம் விதிக்காமல் இருப்பதற்காக 100 ரிங்கிட்டிலிருந்து 300 ரிங்கிட் வரையிலும் பணத்தை செலுத்துமாறு கடை உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு செய்ய விரும்பாதவர்களுக்கு 1,000 ரிங்கிட் வரையிலும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளனர் என்று சீன் கூறினார்.

இது மிகவும் மோசமான நிலை. சிலாங்கூரில் இவ்வாறு நடப்பது இது முதல் முறையல்ல. அம்பாங் பகுதியில் உள்ள பாண்டான் பகுதியிலிருந்தும் எங்களுக்கு புகார்கள் வந்துள்ளனஎன்று சுங்கை பேலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியூ கூறினார்.

கடை உரிமையாளர்களுடன் லீயூ எம்ஏசிசிக்கு வருகை தந்து இன்று திங்கட்கிழமை புகார் அளித்துள்ளார்.