Home நாடு அஸ்மின் அலி காணொளிகளில் மாற்றம் செய்யப்படவில்லை!- அயல்நாட்டு தொழில்நுட்ப நிபுணர்கள்

அஸ்மின் அலி காணொளிகளில் மாற்றம் செய்யப்படவில்லை!- அயல்நாட்டு தொழில்நுட்ப நிபுணர்கள்

1017
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் சம்பந்தப்பட்ட ஓரினச் சேர்க்கை குறித்த காணொளி தொடர்பில் ஆஸ்திரேலிய ஊடக அமைப்பான எஸ்பிஎஸ் செய்தி நிறுவனம் இத்துறையில் திறன்மிக்கவர்களின் அறிவுரையைக் கேட்டுள்ளது தொடர்பில் அது செய்தி வெளியிட்டுள்ளதாக மலேசியாகினி செய்தி பதிவிட்டுள்ளது.

அச்செய்தியின்படி அக்காணொளியில் இருப்பது அஸ்மின்தான் என குறிப்பிட இயலவில்லை என்றாலும், இலக்கமுறை அடிப்படையில் எந்தவொரு மாற்றங்களும் அந்த காணொளியில் செய்யப்படவில்லை என அது குறிப்பிட்டுள்ளது. இது குறித்து இது தொடர்பான நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஒருவேளை இது செயற்கை நுண்ணறிவு (டீப்பேக்) என்றால், அது மிகவும் நல்ல முறையில் கையாளப்பட்டுள்ளது” என்று கெவின் நுயேன் எனும் தொழில்நுட்ப நிபுணர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

அஸ்மின் தொடர்பான மூன்று காணொளிகளையும் கவனித்ததில், அக்காணொளிகளில் எந்த ஒரு மாற்றங்களும் செய்யப்பட்டிருப்பதாக தெரியவில்லை என்று அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இதே போன்று பல்வேறு நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் தற்போது வேறு திசை நோக்கி கவனிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.