Home நாடு வில்லியமின் குற்றசாட்டுக்கு பதில் கூறுவதை தவிர்த்த அமைச்சர் அந்தோனி லோக்!

வில்லியமின் குற்றசாட்டுக்கு பதில் கூறுவதை தவிர்த்த அமைச்சர் அந்தோனி லோக்!

971
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை பிற்பகல் புத்ராஜெயாவில் தனது அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் ஊடகவியலாளர்களைத் தவிர்த்ததாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டில் எம்எச்370 காணாமல் போனது தொடர்பான விசாரணை குறித்து அமெரிக்க விமான எழுத்தாளர் வில்லியம் லாங்கேவிஷே கூறியது குறித்து பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்க இருந்ததாகக் கூறப்படுகிறது.

எம்எச்370 காணாமல் போனது தொடர்பான தகவல்களை மலேசிய காவல் துறையினர் மறைத்து வைத்திருப்பதாக நேற்று செவ்வாய்க்கிழமை லாங்கேவிஷே கூறியதாக செய்தி வெளியானது. குறிப்பாக விமானத்தின் விமானி, கேப்டன் ஜாஹாரி அகமட் ஷா பற்றிய விவரங்களை காவல் துறையினர் மறைத்து விட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

விமானத்தை கடலில் மூழ்கடிக்கும் நோக்கத்தோடு 238 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஜாஹாரி கொன்றார் என்ற கருத்தை அவர் மீண்டும் முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டு அமெரிக்கா இதழான டி அட்லாண்டிக்கின் ஜூலை மாதம் இதழில் இடம்பெற்றுள்ளது.

மலேசியர்கள் முழு கதையையும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் இந்த குற்றச்சாட்டை எளிதில் மறுக்க முடியும் என்று கூறி லாங்கேவிஷேவின் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.