Home இந்தியா வங்கியில் ஐந்தரை கோடி கடன் – விஜயகாந்த் சொத்துகள் ஏலம்

வங்கியில் ஐந்தரை கோடி கடன் – விஜயகாந்த் சொத்துகள் ஏலம்

960
0
SHARE
Ad

சென்னை – இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஐந்தரை கோடி கடன் பெற்றிருப்பதாகவும், அந்தக் கடனை இதுவரை திருப்பிச் செலுத்தாத அவரது சொத்துகள் ஏலத்திற்கு வருவதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து விஜய்காந்தின் வீடுகள், ஆண்டாள் அழகர் கல்லூரி ஆகிய சொத்துகள் ஏலத்துக்கு விடப்படுகின்றன.

கடந்த இந்தியப் பொதுத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தேமுதிக மோசமான அளவில் தோல்வியைச் சந்தித்தது.

#TamilSchoolmychoice

நடிகராக இருந்த விஜயகாந்தை முன்னிறுத்தி அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் அரசியல் நடவடிக்கைகள், விஜயகாந்தின் உடல்நலம் காரணமாக பெரும் பின்னடைவைச் சந்தித்தன. அவரது ஆதரவுக் களமும் பெருமளவில் சரிந்தது.

இந்நிலையில்தான் அவரது வங்கிக் கடன் காரணமாக சொத்துகள் ஏலம் விடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பிரச்சனையில் இருந்து விஜயகாந்த் மீள்வாரா அல்லது சொத்துகளை இழப்பாரா என்ற கேள்விக் குறி தமிழக அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.