Home அரசியல் ஆட்சி மாற்றங்கள் குறித்த நஜிப்பின் அறிவிப்பை வரவேற்கிறேன் – அன்வார்

ஆட்சி மாற்றங்கள் குறித்த நஜிப்பின் அறிவிப்பை வரவேற்கிறேன் – அன்வார்

501
0
SHARE
Ad

MALAYSIA-POLITICS-ANWARகோலாலம்பூர், ஏப்ரல் 4 – எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றங்கள் ஏதும் நிகழும் பட்சத்தில், அவை எந்த ஒரு அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் நடைபெறும் என்று பிரதமர் நஜிப் நேற்று நாடாளுமன்றம் கலைப்பிற்குப் பிறகு அறிவித்ததை அடுத்து, எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், பிரதமரின் இந்த அறிவிப்பை தான் வரவேற்பதாக அறிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் நஜிப் இது போன்று முறையான மற்றும் ஆரோக்கியமான விவாதங்களை தொடர்ந்து மேற்கொண்டு, மக்கள் தாங்கள் விரும்பிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க வழிவகுக்க வேண்டும் என்றும் அன்வார் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இது பற்றி அன்வார் கூறுகையில், “இந்த புதிய அரசாங்கம் திறமையானது மட்டுமல்ல நாட்டை முன்னோக்கி செலுத்தக் கூடிய வலிமையுடையது. அதோடு ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களை முற்றிலும் ஒழிக்கும் ஆற்றல் வாய்ந்தது. எனவே எதிர்வரும் பொதுத் தேர்தல், மலேசிய மக்களுக்கு கிடைத்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பு. அதை பயன்படுத்தி ஓர் புதிய அரசாங்கத்தை தேர்தெடுத்துக் கொள்ளும் படி மக்கள் கூட்டணியின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” என்று அன்வார் தெரிவித்துள்ளார்.