
ஜோர்ஜ் டவுன் – பினாங்கு மாநிலத்தின் பத்து பெரிங்கி வட்டாரத்தில் நிலச் சரிவு ஏற்பட்டு தடுப்புச் சுவர் விழுந்ததில் சிக்கிக் கொண்டவர்கள் என நம்பப்படும் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவர்கள் அனைவரும் மியன்மான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. எனினும் இவர்களிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லாததால், இவர்கள் குறித்த விவரங்களைப் பெற காவல் துறை மியன்மார் தூதரகத்தைத் தொடர்பு கொண்டுள்ளது.
நான்காவது நபரின் சடலம் இன்று அதிகாலை 3.35 மணியளவில் அடையாளம் காணப்பட்டு, மீட்கப்பட்டது.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.25 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் சிக்கிக் கொண்ட நால்வரும் உயிரிழந்திருக்கின்றனர்.