Home நாடு 1எம்டிபி பணத்திலிருந்து வாங்கிய சொகுசு அடுக்குமாடி வீட்டை விற்க அமெரிக்க நீதித்துறை விண்ணப்பம்!

1எம்டிபி பணத்திலிருந்து வாங்கிய சொகுசு அடுக்குமாடி வீட்டை விற்க அமெரிக்க நீதித்துறை விண்ணப்பம்!

651
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி பணத்தில் வாங்கப்பட்டதாக நம்பப்படும் மன்ஹாட்டனின் வாக்கர் கட்டிடத்தில் அமைந்துள்ள 51 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொகுசு அடுக்குமாடி வீட்டை பறிமுதல் செய்து விற்பதற்கு அமெரிக்க வழக்கறிஞர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் கூட்டரசு நீதிபதியிடம் அவ்வழக்கை மேற்பார்வையிடுமாறு நேற்று செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டனர்.

அபுதாபியின் அரசாங்கத்திற்கு சொந்தமான அனைத்துலக பெட்ரோலிய முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் நிருவாக இயக்குனர் காடெம் அப்துல்லா அல் குபைசி கடந்த 2014-ஆம் ஆண்டில் அந்த சொகுசு அடுக்குமாடி வீட்டை வாங்கியதாக அமெரிக்க நீதித்துறை கூறுகிறது.

அல் குபைசிக்கு சமீபத்தில் அபுதாபியில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக டி வால் ஸ்ட்ரீட் சஞ்சிகை தெரிவித்துள்ளது. அவரும், அவரது கூட்டாளிகளும் 336 மில்லியன் அமெரிக்க டாலரை செலுத்த உத்தரவிடப்பட்டது என வால் ஸ்ட்ரீட் குறிப்பிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

கடந்த 2012-ஆம் ஆண்டில், அல் குபைசி 1எம்டிபியிலிருந்து 473 மில்லியன் அமெரிக்க டாலர்களை திருடியதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

மலேசிய காவல் துறையால் தேடப்பட்டுவரும் மலேசிய தொழிலதிபர் ஜோ லோ, இவ்விவகாரத்தில் அவருக்கு உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.