Home கலை உலகம் நீட் தேர்வுக்கு எதிராகப் பேசிய ‘ராட்சசி’ ஜோதிகாவுக்கு சமூகப் பக்கங்களில் வரவேற்பு!

நீட் தேர்வுக்கு எதிராகப் பேசிய ‘ராட்சசி’ ஜோதிகாவுக்கு சமூகப் பக்கங்களில் வரவேற்பு!

861
0
SHARE
Ad

சென்னை: நேற்று செவ்வாய்க்கிழமை சென்னையில் ராட்சசி திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஜோதிகா, நீர் தேர்வுக்கு எதிராகப் பேசியது இரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பெரும்பாலான நடிகைகள் இது குறித்து தங்களின் கருத்துகளை தெரிவிக்காத நிலையில், ஜோதிகா முன்வந்து தைரியமாக அத்தேர்வுக்கு எதிராகப் பேசியது பரவலாகப் பகிரப்பட்டது.  

எங்களின் அகரம் அறக்கட்டளையில் படிக்கும் பல குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்கின்றனர். அவர்கள் படிக்கும் பல பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் உள்ளனர். அடிப்படை தேவைகள் கூட இல்லாத பள்ளிகளாக உள்ளது. இப்படி அரசு பள்ளிகளில் மிக சிக்கலான நிலையில் படிக்கும் பிள்ளைகள் எப்படி நீட் போன்ற தேர்வுகளை எதிர்கொள்வார்கள்?” என்று அவர் பேசியுள்ளார்.  

#TamilSchoolmychoice

தமிழ் திரையுலகில் இருந்து யாருமே வெளிப்படையாக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் ஜோதிகா தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்து இருப்பது பாராட்டுக்குரியது என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.