முந்தைய காணொளி யூடியூப் தளத்தின் சமூக தரங்களை மீறியதற்காக அகற்றப்பட்டது.
அக்காணொளியில் இருப்பது தாம்தான் என பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ஹசிக், படுக்கையில் இருந்து எழுந்திருப்பதைக் காணலாம். அதே நேரத்தில் இரண்டாவது நபர் தனது கைபேசியைப் பயன்படுத்துகிறார். புகைப்படங்கள் எடுக்கும் போது வெளிவரும் ஒளிகள் போன்று, அச்சாதனத்தின் திரையில் இருந்து இரண்டு ஒளிகள் வெளிவருகின்றன.
ஒரு குளியல் அங்கியை அணிந்தவாறு ஹசிக் அறை முழுவதும் நடந்து செல்வதையும் அக்காணொளியில் காணலாம்.
இந்த காணொளி தொடர்பாக காவல் துறை தற்போது விசாரணை நடத்திக் கொண்டிருப்பதாக காவல் துறை துணைத் தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோர் கூறியுள்ளார்.