Home இந்தியா தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லை, மக்களவையில் ரவீந்திரநாத் பேச்சால் சர்ச்சை!

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லை, மக்களவையில் ரவீந்திரநாத் பேச்சால் சர்ச்சை!

1044
0
SHARE
Ad

சென்னை: தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லை என மக்களவையில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் குமாரின் பேச்சு தமிழக மக்களிடத்தில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் பிரதிநிதியாக தாம் மட்டுமே மக்களவையில் இருப்பதாகவும், தமக்கு எதிராக இருக்கும் 37 எதிர்கட்சி உறுப்பினர்கள் பொய்களை பரப்பி வருவதாகவும் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தற்போதைய மற்றும் எதிர்கால தண்ணீர் பிரச்சனையை எதிர்கொள்ள தமிழ் நாடு அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், அதற்கான ஆவணங்கள் தம்மிடம் உள்ளதென்றும் ரவீந்திரநாத் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

தம்மிடமுள்ள ஆதாரங்களை எதிர் தரப்பு ஊடகங்களிடம் தாம் தருவதற்கு தயாராக இருப்பதாகவும், அவற்றை எந்தவொரு ஒளிவுமறைவுமின்றி அவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இவ்வாறாக அவர் மக்களவையில் பேசும் போது எதிர் தரப்பிலிருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.